15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..!! ஏன்..?? எங்கு.??
UDAN (Use Desh Ka Aam Naagrik) என்ற புதிய விமான இணைப்பு திட்டம் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையின் கீழ் இந்த திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது.
தொடங்கிய நோக்கம்: பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதற்கு மிகவும் குறைந்த விலையில் விமான பயணத்தை சாதாரண மக்களும் பயணம் செய்ய தொடங்கப்பட்டது.
முதல் உதான் விமானமானது ஏப்ரல் 27, 2017 அன்று சிம்லா – டெல்லி இணைக்கும் வகையில் புறப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் உதான் 1, உதான் 2, உதான் 3, மற்றும் உதான் 4 என்ற நான்கு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 98 விமான நிலையங்கள் 33 ஹெலிகாப்டர் நிலையங்கள் மற்றும் 12 விமான நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது 59 விமான நிலையங்களில் 350 க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 5 ஹெலிகாப்டர் நிலையங்கள் மற்றும் 2 விமான நிலையங்களில் விமான சேவை வழங்கப்பட்டு வந்தது.
அரசுக்கு சொந்தமான இந்திய விமான நிலைய ஆணையம்(AAI) லக்னோ, அகமதாபாத், மங்களூர், ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஆறு விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
உதான் திட்டம் தோல்வியடைந்ததா.?? உதான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 15 விமான நிலையங்கள் தற்பொழுது குறைந்த பயணிகளின் எண்ணிக்கை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எந்தெந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது? சிம்லா, பதான்கோட், ரூர்கேலா மற்றும் லூதியானா உள்ள 15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு ஆனது தெரிவித்துள்ளது.