அதிரடி..!! 33 வயது மலேசிய நபர் கைது..!! காரணம்..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ய முயன்றதாகக் கூறப்படும் 33 வயது மலேசிய நபர் மீது இன்று(06.11.25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
இம்மாதம் 04.11.25 அன்று பணவியல் ஆணைய அதிகாரியாக ஒருவர் ஆள்மாறாட்டம் செய்வதாக புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறை விரைவாக விசாரணை தொடங்கியது.
அந்த நபர், பாதிக்கப்பட்டவரிடம் பணமோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, காவல்துறை விசாரணைக்கு உதவ அவரின் சொத்துக்களை ஒப்படைக்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவர், பாதிக்கப்பட்டவரை தனது வங்கிக் கணக்கிலிருந்து $15,000 எடுத்து அடையாளம் தெரியாத ஒருவரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய காவல் நிலைய அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுத்ததால், பாதிக்கப்பட்டவர் பணம் கொடுப்பதற்கு முன்பே அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் இதே போன்ற பல வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், மற்ற அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் பலரை ஏமாற்றியிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.