ஆசியான் பொருளாதார ஒருங்கிணைப்பில் புதிய மைல்கல்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது, ஆசியான் உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளும் கூட்டாளி நாடுகளும் பல முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இது ஆசியான் பொருளாதார ஒருங்கிணைப்பில் புதிய அத்தியாயமாகும்.
துணைப் பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங் கூறியதாவது, இந்த புதிய தலைமுறை ஒப்பந்தங்கள் ஆசியான் நாடுகளில் வணிக வளர்ச்சிக்கும், உலகப் பொருளாதார மையமாக உருவாகும் முயற்சிக்கும் வலுவாக துணைநிற்கும் என தெரிவித்தார்.