பொதுமக்களே கவனம்..!!FIDReC விடுத்த முக்கிய எச்சரிக்கை..!!

பொதுமக்களே கவனம்..!!FIDReC விடுத்த முக்கிய எச்சரிக்கை..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த நிதியாண்டில் நுகர்வோர், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 4,355 உரிமைகோரல்கள் தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

நிதித் தொழில் தகராறு தீர்வு மையம் (FIDReC) வெளியிட்ட அறிக்கையின்படி, இது முந்தைய ஆண்டைவிட 50% அதிகம் என்று கூறியுள்ளது. மேலும் தகராறுகளில் மூன்றில் ஒன்று மோசடி அல்லது ஏமாற்று சம்பவங்கள் தொடர்புடையதாகும்.

மோசடிகள் தொடர்பான வழக்குகள் கடந்த ஆண்டின் 829 இலிருந்து 1,285 ஆக உயர்ந்துள்ளன.இது கிட்டத்தட்ட 55% உயர்வைக் குறிக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை வங்கி கணக்கு, டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது டிஜிட்டல் வாலெட் தகவல் கசிவு காரணமாக ஏற்பட்டவை.

அதிகாரிகள் கூறுகையில், மோசடி முறைகள் இப்போது மேலும் நுணுக்கமாகி வருகின்றன. இதனால் நுகர்வோர் அறியாமலே தங்கள் கணக்கு விவரங்களை பகிர்ந்து விடுகின்றனர்.

FIDReC தலைவர் ஹுய் ஹான் சாய் கூறுகையில்,
“இன்றைய மோசடிகள் மிகவும் நுட்பமானவை. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நாங்கள் கல்வி முயற்சிகளை மேலும் வலுப்படுத்தி, வங்கிகள் வாடிக்கையாளர்களுடன் வெளிப்படையான நடைமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்வோம்,” என்று தெரிவித்துள்ளார்.

FIDReC நுகர்வோரிடம் நிதி பரிவர்த்தனைகளின் போது OTP, கணக்கு விவரங்கள், அல்லது தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம் எனவும், சந்தேகமான பரிவர்த்தனைகள் இருந்தால் உடனடியாக வங்கியைத் தொடர்புகொள்ளுமாறும் எச்சரித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK