சிங்கப்பூரில் HDB அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை விலைகள் அக்டோபரில் குறைந்ததா? அதிகரித்ததா?
சிங்கப்பூரில் ரியல் எஸ்டேட் சந்தை பரிவர்த்தனை வலைதளங்களான SRX மற்றும் 99.co HDB அடுக்குமாடி குடியிருப்புகளின் மறுவிற்பனை விலைகள் குறித்து கடந்த மாதம் அக்டோபரில் விலை சரிந்து உள்ளதா? அதிகரித்துள்ளதா? என்ற முதற்கட்ட தரவுகளை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் அக்டோபரில் அதிகபட்ச மறுவிற்பனை விலை பூன் கெங் சாலையில் அமைந்துள்ள ஐந்து அறைகள் கொண்ட HDB பிளாட் ஆகும். இதன் விற்பனை விலையானது $1.55 மில்லியன் அளவில் விற்கப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில் 87 யூனிட்டுகள் குறைந்தது ஒரு மில்லியன் யுவான் விற்பனையாகி உள்ளது. இது முந்தைய மாதத்துடன், அதாவது செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது பாதியாக குறைந்துள்ளது.
முதற்கட்ட தரவுகள்: (அக்டோபர் மாதத்தில்) மறு விற்பனை விலைகள் ஆனது மாதத்திற்கு மாதம் 0.6% சற்று குறைவாக உள்ளது.
ஆனால் வருடத்திற்கு வருடம் ஒப்பிடும்பொழுது 3.8% அதிகரித்துள்ளது.
மொத்தமாக சிங்கப்பூரில் HDB அடுக்குமாடி குடியிருப்புகளின் மறுவிற்பனை விலைகள் ஆனது கடந்த மாதம் ஒப்பிடும்போது மாதாந்தோறும் சற்று குறைந்து காணப்படுவதாகவும் பரிவர்த்தனை அளவானது சரிந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடுகள் ஆனது தெரிவித்துள்ளது.