பக்தர்கள் அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பிரபல கோயிலில் விபத்து..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரபல குவாங்மிங்ஷான் புஜு கோயிலில் உள்ள மாஸ்டர் ஹாங் சுவானின் நினைவு மண்டபத்தின் கூரை அமைப்பு திடீரென இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் ஏராளமான கூரை ஓடுகள் தரையில் சரிந்து விழுந்தன.
பாதிக்கப்பட்ட இரண்டு கட்டிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.ஆனால் கோயில் வழக்கம்போல் பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.
இந்த சம்பவம் நேற்று (26.11.25) இரவு 8:25 மணியளவில் நடந்தது.
நவம்பர் 23 முதல் 30 வரை ஏழு நாள் நீர் மற்றும் நில தர்ம சபையை கோயில் நடத்தி வந்தது. சம்பவம் நடந்த நேரத்தில், சபை வேறு இடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் பங்கேற்பாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
அதற்காக இன்று அதிகாலை 3:15 மணிக்கு ஹாங் சுவான் துறவி நினைவு மண்டபத்தில் நடைபெறவிருந்த விழா நிறுத்தி வைக்கப்பட்டது.
சில பகுதிகள் மூடப்பட்டிருந்தாலும், பிற நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என்றும், பொதுமக்கள் இன்னும் குவாங்மிங்ஷான் புஜு கோயிலுக்குச் செல்லலாம்.
சிவில் பாதுகாப்புப் படையினர் இரவு 8:25 மணிக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை எடுத்தனர்.
கூரை ஓடுகள் சுமார் நான்கு மாடி உயரத்திலிருந்து விழுந்து, அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் சேதமடைந்தன. ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாகவும் கூறப்பட்டது.
கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) தெரிவித்ததாவது, கோயிலின் ஒட்டுமொத்த கட்டமைப்பு பாதிக்கப்படவில்லை. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட பகுதிகள் மூடப்பட்டுள்ளன.
BCA, புஜு கோயில் நிர்வாகத்துக்கு ஒரு தொழில்முறை பொறியாளரை நியமித்து, ஓடு விழுந்ததற்கான காரணத்தை ஆராயவும், மீண்டும் இத்தகைய விபத்துகள் நிகழாமல் தடுக்க நிரந்தர பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.