குறிப்பாக Driver,Lasing,operators இதுபோன்ற வேலை மிகவும் சிறந்த வேலை ஆகும்.
DRIVING வேலைக்கு செல்பவர்கள் சிங்கப்பூரில் லைசென்ஸ் எடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் பேட்ச் லைசன்ஸ் அல்லது ஹெவி லைசன்ஸ் வைத்திருந்தாலே நீங்கள் இந்த வேலைக்கு செல்லலாம்.
இதற்கு இந்தியாவிலேயே பயிற்சியும் அளிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் சிங்கப்பூரிலும் உங்களுக்கு பயிற்சி கொடுத்து இந்த வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். இந்த வேலைக்கு உங்கள் செலவு போக மாதம் வீட்டிற்கு 50,000 இல் இருந்து 60,000 வரை அனுப்பலாம்.
PSA வேலைக்குச் செல்ல வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சென்னையில் பயிற்சி கொடுத்து இன்டர்வியூவும் வைப்பார்கள். அதில் நீங்கள் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என்றால் இந்த வேலைக்கு நீங்கள் சிங்கப்பூருக்கு செல்லலாம்.
அடுத்த மாதமோ அல்லது ஜனவரி மாதமோ மீண்டும் இந்த வேலைக்கு பயிற்சி அளிப்பதற்கு தயாராகி வருகிறார்கள்.
நீங்கள் இந்த வேலைக்குச் செல்ல விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும். எப்பொழுது அதற்கு உண்டான பயிற்சி தொடங்குகிறார்கள் என்று நமது பக்கத்தில் நாம் தெரிவிப்போம்.