சிங்கப்பூரில் 2027 ஆம் ஆண்டில் வரவுள்ள ஓய்வு மையம்..!!

சிங்கப்பூரில் 2027 ஆம் ஆண்டில் வரவுள்ள ஓய்வு மையம்..!!

நோவெனாவிற்கு அருகில் உள்ள 2 மோமன் சாலையில் முன்னாள் தொற்று மையம் உள்ளது. இந்த இடம் அரசுக்கு சொந்தமானது.

எனவே டென்டருக்கு விடப்பட்டுள்ளது. தற்போது இதை மவுண்ட் டென் பசியை நிர்வாகிக்கும் அதே நிறுவனமான கண்ட்ரி சிட்டி இன்வெஸ்ட்மென்ட் டென்டருக்கு எடுத்துள்ளது.

இந்த முன்னாள் தொற்றுநோய் மையமானது சிங்கப்பூரின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்து வந்துள்ளது.

இது 1913 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மில்டிங் டன் என்ற மருத்துவமனையில் தொடங்கப்பட்ட மையமாகும். இது பின்னர் தொற்றுநோய் மையமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இதன் அளவானது 91,000 சதுர மீட்டர் பரப்பளவு கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களையும் கொண்டுள்ளது.

இது பின்னர் 2027 ஆம் ஆண்டில் ஓய்வு மையமாக மாற்றப்படும். இந்த தொற்றுநோய் மையமானது மறு வடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளூர் வாசிகளுக்கு ஒரு புதிய ஓய்விடமாக மாற்றம் தரும்.

காலியாக உள்ள நிலம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களை அனைத்து வயதினருக்கும் ஏற்பது போல் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆரோக்கிய இடங்கள் மற்றும் செல்லப்பிராணிகள் விளையாடும் விதமாக இந்த பகுதி மாற்றியமைக்கப்படும்.

இந்த மாற்று வடிவமைப்பு மேம்பாடானது பூங்காவின் ஒரு சுற்றுப்புற அமைப்பானது கிராமப்புறத்தை உள்ளடக்கியும் ஒரு பசுமை தோற்றத்தையும் அதே வேலையில் நவீன வசதிகளை உட்படுத்தியும் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK