பயணிகளுக்காக இலவச இரவு பேருந்து சேவை அறிமுகம்..!! எங்கிருந்து தெரியுமா..??

பயணிகளுக்காக இலவச இரவு பேருந்து சேவை அறிமுகம்..!! எங்கிருந்து தெரியுமா..??

சிங்கப்பூர்:கேபிடாலேண்ட் நிறுவனம் கிளார்க் கீயில் இருந்து நகரத்தின் பல முக்கிய இடங்களுக்கு செல்லும் இலவச இரவு நேர பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இயங்கும்.

புதிய “City Shuttle Loop” சேவை CQ@Clarke Quay, Somerset MRT (Exit A), ION Orchard, Ascott Orchard Hotel, Odeon Lane, மற்றும் Raffles City ஆகிய ஆறு நிலையான நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றும். கிளார்க் கீயிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு புறப்படும் பேருந்துகள் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் அடுத்த நிறுத்தத்தை அடையும், கடைசி பேருந்து அதிகாலை 2 மணிக்கு புறப்படும்.

மேலும், ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் அதிகாலை 4 மணிக்கு CQ@Clarke Quay இலிருந்து Tampines MRT (Exit B) மற்றும் Jurong East/West பகுதிகளுக்கு ஒரு வழி சிறப்பு பேருந்து சேவைகளும் இயக்கப்படும்.

நகர ஷட்டில் பேருந்துகளில் 23 பயணிகளும், Tampines மற்றும் Jurong நோக்கி செல்லும் பேருந்துகளில் 45 பயணிகளும் அமர முடியும். கேபிடாலேண்ட் தெரிவித்ததாவது, இந்த சேவை இரவு நேரங்களில் மக்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் வீட்டிற்கு திரும்ப உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

பேருந்து நேர அட்டவணை மற்றும் பாதை விவரங்களை CQ@Clarke Quay இன் அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தில் பார்க்கலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK