அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மங்குடி பாலம் அருகே மற்றும் சமத்துவபுரம் செல்லும் சாலையில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்து மற்றும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் டிரைவர் உட்பட 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலத்த காயமடைந்த மூன்று பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.