பயணிகளே..!!LTA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

பயணிகளே..!!LTA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இனி சிறிய MRT கோளாறுகள் ஏற்பட்டால், பரவலான அறிவிப்புகளை வெளியிடுவதற்குப் பதிலாக, நேரடியாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தகவல் வழங்குவதே ஆபரேட்டர்களின் முன்னுரிமை என நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2 அன்று மாலை, கிழக்கு–மேற்கு வழித்தடத்தில் அல்ஜுனிட் MRT நிலையம் அருகே ஏற்பட்ட தண்டவாள சுவிட்ச் கோளாறால் தாமதங்கள் ஏற்பட்டன. இதனால் சில பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினர்.ஏனெனில் SMRT அல்லது LTA எந்த அதிகாரப்பூர்வ புதுப்பிப்பையும் வெளியிடவில்லை.

இந்த விவகாரம் குறித்து LTA தெரிவித்ததாவது, “சிறிய செயலிழப்பு ரயில்வேயின் ஒரு குறுகிய பகுதியை மட்டுமே பாதித்தால், மேலும் தாமதம் 30 நிமிடங்களுக்கு குறைவாக இருந்தால், ஆபரேட்டர்கள் பெருமளவில் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட நிலையங்களில் உள்ள பயணிகளுக்கு நேரடியாக தகவல் தருவார்கள்.” என்று கூறியது.

முன்னதாக, MRT தாமதங்கள் குறித்து பரவலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.ஆனால் பொதுமக்கள் இத்தகைய அறிவிப்புகள் பெரும்பாலும் தனிப்பட்ட பயணிகளின் அனுபவத்துடன் பொருந்தவில்லை என கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ரயில் நம்பகத்தன்மை பணிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், LTA மற்றும் MRT ஆபரேட்டர்கள் சிறிய செயலிழப்புகளைப் பற்றிய புதிய தகவல் வழங்கும் முறைகளை பின்பற்ற முடிவு செய்தனர்.

அதேநேரம், LTA மற்றும் ஆபரேட்டர்கள், பயணிகளின் குறிப்பிட்ட புறப்படும் இடம் மற்றும் இலக்கு அடிப்படையில், ஆன்லைனில் கூடுதல் பயண நேரத்திற்கான துல்லியமான தகவலை வழங்கும் புதிய டிஜிட்டல் அமைப்பை உருவாக்கி வருகின்றனர். இதன் நோக்கம், பொதுவான “தாமதம் உள்ளது” என்ற பரவலான அறிவிப்புகளுக்கு பதிலாக, பயணிகளுக்கேற்ற துல்லியமான தகவலை வழங்குவது என தெரிவித்தனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK