நவம்பர் 2-வது வாரத்தில் இருந்து இண்டிகோவின் புதிய சேவை..!!
தமிழக அளவில் ஒப்பிடும்போது சென்னைக்கு இணையாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தான் சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதிலும் முக்கியமாக பெருந்தொற்று ஏற்பட்டு இருந்தால் பேரிடர் காலத்தில் சென்னையை விடவும் அதிக அளவில் திருச்சியில் இருந்து தான் சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஏற்கனவே சிங்கப்பூர்- திருச்சி இடையே வாரத்திற்கு 7 விமானங்களை இண்டிகோ நிறுவனமானது செயல்படுத்தி வருகின்றது.
தற்பொழுது மேலும் புதிய சேவையை செயல்படுத்த indigo நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய சேவை என்ன? நவம்பர் மாதம் 2- வது வாரத்தில் இருந்து வாரத்திற்கு 11 விமானங்களை சிங்கப்பூர் திருச்சியிடையே செயல்படுத்த உள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.