மங்களூர்: 2022 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி அன்று கைபேசியின் whatsapp செய்தி மூலமாக மோசடி சம்பவம் தொடர்ந்து உள்ளது.
அங்கிட் என்றால் பெயரில் அடையாளம் தெரியாத நபர் ஒரு நபருக்கு தொடர்பு கொண்டு அவரது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்யும்போது அது உங்களுக்கு இரட்டிப்பாகும் என்று உறுதி அளித்துள்ளார்.
சோமிட் ஜஸ்வால், குஷாகர் ஜைன், அகில் என்ற மூவரையும் அறிமுகம் செய்து இந்த நிறுவனத்தில் லாப ஈட்டக்கூடிய வெளிநாட்டு முதலீடுகளை நிர்வாகிப்பவர்கள் என கூறினார்.
அங்கிட்டின் நம்பிக்கை வார்த்தையை நம்பிய அந்த நபர் 3 ஆயிரத்து 500 ரூபாய் முதலில் அனுப்பி வைத்தார். உடனேயே அவருக்கு லாபமாக ஆயிரம் ரூபாய் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது.
கிடைத்த லாபத்தின் மூலம் நம்பிக்கையை மேலும் பெற்று சில மாதங்களில் படிப்படியாக அவரது கணக்குடன் தனது மாமா, மனைவி, மற்ற உறவினர்களின் கணக்குகளில் இருந்தும் பணத்தை அனுப்பியுள்ளார்.
2022 – 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி வரையில் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்த நபர்களின் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லாத நிலையில் சில மாதங்களாக தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அங்கிட்டை புகார் தாரர் தொடர்பு கொண்டபோது குறிப்பிடப்பட்ட மூவரால் அவரும் ஏமாற்றப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட கும்பாளுடன் எந்தவித உறவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மோசடி கும்பல் புகார் தாரரை அழைத்து காவல்துறையிடம் புகார் அளிக்காமல் தடுத்து கொலை மிரட்டல் எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இறுதியாக குடும்ப உறுப்பினர்களிடம் உண்மையை கூறி புகார் மங்களூர் நகர காவல் துறையின் உதவியை நாடிச் சென்றுள்ளார். மொத்தமாக அந்த நபர் இரண்டு கோடி ரூபாய் இழந்துள்ளார்.