கடனை அடைக்க சரவாக் குற்ற கும்பலுடன் இணைந்த மலேசியர்..!!

கடனை அடைக்க சரவாக் குற்ற கும்பலுடன் இணைந்த மலேசியர்..!!

சிங்கப்பூர்:சரவாக் குற்றக் கும்பலுக்காக வங்கிக் கணக்குகளை உருவாக்கியதாக 34 வயது மலேசியர் டான் காங் யுன் (Tan Kang Yun) குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவர் குற்றக் கும்பலுடன் ஆறு மாதங்கள் இருந்தபோதிலும், மொத்தம் 70 புதிய வங்கிக் கணக்குகளை உருவாக்கி, அவற்றின் மூலம் S$8,37,000 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன.

இதில் S$ 43,000 சிங்கப்பூரில் நடந்த மோசடிகளிலிருந்து வந்தவை என்று விசாரணையில் தெரியவந்தது.

அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்ததாவது, இந்தக் கும்பல் மனிதவள அமைச்சின் வெளிநாட்டு வேலை அனுமதி சேவைகளை குறிவைத்து மோசடி நடவடிக்கைகள் மேற்கொண்டது.

டான் முன்பு உரிமமில்லாத கடன் கொடுப்பவர்களிடம் இருந்து 50,000 ரிங்கிட் (சுமார் S$15,700) கடன் பெற்றிருந்தார். அதைக் கழிக்க முடியாத நிலையில் இருந்தபோது, குற்றக் கும்பல் ஒருவர் கடன் அடைக்க உதவி அளிப்பதாகவும், அவருக்கு மாதத்திற்கு 3,000 ரிங்கிட் (சுமார் S$942)சம்பளம் வழங்கப்படும் என்று கூறி அவரை தங்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினர்.

இந்த குற்றச் செயல்களிலிருந்து டான் மொத்தம் 6,500 ரிங்கிட் (சுமார் S$2,040) பெற்றதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அரசு தரப்பு வழக்கறிஞர்கள், அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் S$2,000 அபராதமும் விதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

வழக்கு அடுத்த டிசம்பர் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK