மெரினா பே சாண்ட்ஸ்க்கு அபராதம் விதிப்பு..!! காரணம் என்ன??

மெரினா பே சாண்ட்ஸ்க்கு அபராதம் விதிப்பு..!! காரணம் என்ன??

சிங்கப்பூர்: அக்டோபர் மாதம் 2023 ஆம் ஆண்டில் சுமார் 6,65,500 மெரினா பே சான்ட்ஸ் வாடிக்கையாளர்களுடைய தனிப்பட்ட தரவுகள் சட்டத்திற்கு புறம்பாக அணுகப்பட்டு தெரியாத தரப்பினர் மூலமாக தரவுகள் கசிவானது ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் உடைய பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் உள்ளிட்டம் தரவுகள் பின்னர் டார்க் வெப்பில் விற்பனைக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

மார்ச் மாதம் 2023 ஆம் ஆண்டில் ஒரு பெரிய மென்பொருள் இடம் பெயர்வின்போது மெரினா பே சன்ஸ் வைத்திருந்த தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பதற்காக நியாயமான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த தவறியதாகவும் அதனுடைய பாதுகாப்பு கடமைகளை மீறியதாகவும் PDPC கூறியது.

இந்த மென்பொருள் இடம் பெயர்வின்போது மெரினா பேயின் “கலை அறிவியல் அருங்காட்சியகத்தின் நண்பர்கள்” என்ற வலைப்பக்கத்தை பாதிக்கும் ஒரு அடையாளம் காட்டி தவிர்க்கப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு பிறகு தான் இந்த பிரச்சனையானது கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டது.

இது போன்ற மென்பொருள் இடம் பெயர்வுகளுடன் தொடர்புடைய தெளிவான அபாயங்கள் உள்ள போதிலும் மெரினா பே சன்ஸ் இரண்டாம் நிலை சோதனைகளை செயல்படுத்தாமல் புதிய மென்பொருளில் போர்ட் செய்யப்பட வேண்டிய பயன்பாட்டு நிரல் ஆக இறைமுகம் என்ற பட்டியலை தொகுப்பதற்காக ஒரு பணியாளரை நம்பியுள்ளதாக குழுவினர் கூறியிருந்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபரில் வாடிக்கையாளர்களுடைய தரவு கசிந்த சம்பவத்திற்காக மெரினா பே சாண்ட்ஸ்க்கு தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஆணையம் ஆனது $315,000 அபராதம் விதித்துள்ளது.

இந்த அபராத தொகையானது தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2001நாள் அறிமுகப்படுத்தப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அபராத கட்டமைப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த திருத்தத்தின் மூலமாக சிங்கப்பூரில் ஒரு கோடி விமானுக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டும். பெரிய நிறுவனங்கள் தொடர்புடைய விதிமுறைகளையும் மீறினால் அவற்றின் ஆண்டு வருவாய் இட்டலில் அதிகபட்சமாக 10% வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK