சிங்கப்பூர் வான்வழி பாதுகாப்பில் புதிய முயற்சி..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) மற்றும் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) இணைந்து கடுமையான வானிலை தாக்கத்தை குறைக்கும் நோக்கில் விமான வானிலை ஆய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம், மின்னல், கனமழை, கொந்தளிப்பு மற்றும் மேற்பரப்பு காற்று போன்ற வானிலை மாற்றங்களை முன்கூட்டியே கணித்து, விமான சேவைகளில் ஏற்படும் தாமதங்களை குறைக்க உதவும்.
சாங்கி விமான நிலையத்தில் ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருமுறை மின்னல் தாக்கம் பதிவாகி வருவதால், இந்த முயற்சி பாதுகாப்பையும் செயல்திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 11 மாதங்களில் கடுமையான வானிலை காரணமாக 55 விமானங்கள் திசை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
புதிய திட்டத்தின் கீழ் வானிலை முன்னறிவிப்பு துல்லியமாக்கப்படும். பணியாளர்களின் பாதுகாப்பு உயர்த்தப்படும் மற்றும் தாமதங்கள் குறைக்கப்படும். மேலும், கான்ட்ரைல் எனப்படும் விமான புகை வரிகளின் சுற்றுச்சூழல் விளைவுகளையும் ஆராய்ந்து, பசுமை விமானப் போக்குவரத்துக்கு ஆதரவாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.