2027 இல் அமலுக்கு வரவுள்ள புதிய சட்டம்..!! யாருக்காக இந்த சட்டம்..??

2027 இல் அமலுக்கு வரவுள்ள புதிய சட்டம்..!! யாருக்காக இந்த சட்டம்..??

வேலையில்லாத பாகுபாடு குறித்து ஊழியர்கள் புகார் செய்யும் விதமாக புதிய நடைமுறையை கொண்டு வருவதற்காக நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய மசோதா மூலமாக பிரச்சனையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அவர்களை பேசி தீர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நியாயமான முறைப்படி சர்ச்சைகளை விரைவாக தீர்ப்பதற்கு இந்த நடைமுறையானது உதவும் என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

இந்த புதிய நடைமுறையின் மூலமாக வேலையிட பாகுபாட்டை சந்திக்கும் ஊழியர்கள் முதலில் முதலாளியிடம் புகார் அளிக்க முடியும்.

பிறகு நிறுவனத்தின் நிர்வாகம் அதனை கையாளும். இதன்படி தீர்வு கிடைக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட தரப்பினர் சமரச பேச்சிற்கு செல்ல முடியும்.

இந்த சமரச பேச்சின் மூலமாகவும் ஊழியர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை எனில் சட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

இதுகுறித்து வழக்கு தொடரும் போது வழக்குகளின் தீர்ப்புகளை வெளிப்படையாக பொதுமக்கள் காண முடியும் வகையில் இருக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதிய சட்டத்தில் கூடுதலாக வெளிப்படை தன்மையையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையாக வைத்திருக்கின்றனர்.

எனினும் வழக்குகள் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் அப்போதுதான் அனைத்து தரப்பினரும் பாதுகாப்பாக அவர்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும் என அமைச்சர் டான் கூறியுள்ளார்.

இந்த சட்ட மசோதாவானது 2027 ஆம் ஆண்டின் இறுதியில் புதிய சட்டமாக நடப்பிற்கு வரும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK