சிங்கப்பூரில் இயங்கி வரும் வங்கிகளுக்கு நாளையில் (15/10/2025) இருந்து புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது.
இந்த புதிய நடைமுறையானது சிங்கப்பூரில் உள்ள DBS, OCBC, HSBC, UOB, Citibank, Standard chartered, Maybank ஆகிய வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும்.
புதிய நடைமுறைகள்: ⚠️வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பாதிக்கும் ஏற்பட்ட தொகையை எடுக்கும்போது அல்லது மாற்றும்போது வங்கிகளால் தடுக்க முடியும்.
⚠️குறைந்தபட்சமாக 50,000 வெள்ளி இருக்கும் கணக்குகளுக்கு இந்த புதிய நடைமுறைகள் பொருந்தும்.
⚠️ 24 மணி நேரத்திற்குள் ஒரு முறை அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யும்போது அந்த கணக்கில் உள்ள பணத்தில் பாதிக்கு மேல் பரிமாற்றம் செய்தால் வங்கி நிர்வாகம் உடனேயே பரிவர்த்தனையை நிறுத்த வாய்ப்புள்ளது.