பயணிகள் அதிர்ச்சி..!!அரை மணி நேரம் வானில் வட்டமிட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்..!!
சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஒரு ஓடுபாதையில் பள்ளங்கள் தோன்றியதால் அது தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால், விமானங்கள் மாற்று ஓடுபாதையில் புறப்பட்டு தரையிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சில விமானங்கள் அரை மணி நேரம் வரை தாமதமாகியதாக பயணிகள் தெரிவித்தனர்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SQ851 விமானத்தில் திரு. ஹுவாங் என்ற பயணி குவாங்சோவிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்தார். அவர் கூறுகையில், கேப்டன் மாலை 5:17 மணிக்கும் 5:52 மணிக்கும் வெளியிட்ட அறிவிப்புகளில், ஓடுபாதைகளில் ஒன்றில் பள்ளம் இருப்பதால் மற்றொரு ஓடுபாதை மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். இதனால், விமானம் வான்வழியில் சுற்றி காத்திருந்தது.
விமானம் தரையிறங்க தயாராக இருந்தது. ஆனால் திடீரென வானில் வட்டமிட்டது. காட்சித் திரையில் வருகை நேரம் 23 நிமிடங்களிலிருந்து 53 நிமிடங்களுக்கு உயர்ந்தது,” என்று திரு. ஹுவாங் கூறினார்.
இறுதியாக, SQ851 விமானம் மாலை 6:06 மணிக்கு தரையிறங்கியது.