தெலுக் பிளாங்கா சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (06.12.2025) மதியம் தெலுக் பிளாங்கா சாலையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சங்கிலி மோதலில் இரண்டு வயது குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மற்றும் காவல்துறையினர் வந்தனர்.
காயமடைந்தவர்களில் இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும், மற்ற நான்கு பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் எடுத்த புகைப்படங்கள், சாலையின் வலதுபுறத்தில் மூன்று வாகனங்கள் கடுமையாக சேதமடைந்த நிலையில் இருந்ததை காட்டுகின்றன. முன்னால் இருந்த கருப்பு கார் ஒரு பழுப்பு நிற SUV-க்கு மோதியதையும், அதன் பின்னால் இருந்த வெள்ளை கார் முன்பகுதியில் கடுமையாக சேதமடைந்ததையும் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.
இச்சம்பவத்தில் 35 வயதுடைய ஆண் ஓட்டுநர் ஒருவர் போலீசாரின் விசாரணைக்கு உதவி செய்து வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.