ஸ்டேடியம்– பயோ லெபார் MRT சுரங்கப்பாதை சரிவு..!!!
ரயில் சேவைகள் தற்காலிக மாற்றம்..!!
சிங்கப்பூர்:ஸ்டேடியம் மற்றும் பயோ லெபார் நிலையங்களுக்கு இடையிலான MRT சர்க்கிள் லைன் சுரங்கப்பாதையின் சுமார் 450 மீட்டர் பகுதியின் சில பகுதிகளில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, அடுத்த ஆண்டு ஜனவரி 17 முதல் ஏப்ரல் 19 வரை சுரங்கப்பாதை வலுவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
காலை வேலை உச்ச நேரங்களில் சில ரயில்கள் 2–3 நிமிட இடைவெளியில் இயக்கப்படலாம். சில இடங்களில் 10 நிமிட தாமதம் ஏற்படும் என LTA எச்சரித்துள்ளது. பயணிகள் மாற்று வழிகளை திட்டமிட்டு பேருந்து அல்லது பிற சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
LTA மேலும், சுரங்கப்பாதையின் மென்மையான கடல் களிமண் காரணமாக இத்தகைய சுரங்கப்பாதை சரிவு பொது பொறியியல் சவாலாகும் என்றும், இது நீண்டகாலமாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.