சுரங்க பாதையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பால் அவசரமாக நிறுத்தப்பட்ட ரயில்..!!!
சிங்கப்பூர்:தஞ்சோங் பகார் MRT நிலையம் அருகே நேற்று முன் தினம் (05.12.2025) பிற்பகல் ஒரு சிறிய பரபரப்பு நிலவியது. ஒரு பயணியின் பவர் பேங்கில் இருந்து திடீரென அடர்த்தியான புகையும், விசித்திரமான வாசனையையும் வெளியிட்டதால், ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
சியாவோஹோங்ஷு சமூக தளத்தில் பதிவிட்ட பயணியின் கூற்றுப்படி, சம்பவம் பிற்பகல் 2 மணியளவில் கிழக்கு நோக்கிய ரயிலில் நடந்தது.
பயனியின் பவர் பேங்க் திடீரென புகை வெளியிட்டாலும், வெடிப்பு அல்லது தீச்சம்பவம் எதுவும் ஏற்படவில்லை. பயணி உடனடியாக அவசர பொத்தானை அழுத்தியதாகவும், சில நிமிடங்களில் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
SMRT தலைவர் லாம் ஹியூ காய் கூறுகையில், ரயில் ஊழியர்கள் நிலைமையை விரைவாக கையாண்டு, அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும், நிலையத்தின் புகை வெளியேற்ற அமைப்பு செயல்படுத்தப்பட்டு, புகை விரைவாக அகற்றப்பட்டது.