அலெக்ஸாண்ட்ரா சாலையில் தப்பி ஓட முயன்ற இளைஞர் கைது..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் செல்லுபடியாகும் உரிமம் மற்றும் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியதுடன், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 26 வயது நபர் ஒருவர்,போக்குவரத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பிறகு அந்த இளைஞர் தனது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றார். ஆனால் சில மணி நேரங்களில் போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் டிசம்பர் 7ஆம் தேதி இரவு 10 மணியளவில் அலெக்ஸாண்ட்ரா சாலையில், பாசிர் பஞ்சாங் சாலைக்குச் செல்லும் பகுதியில் நிகழ்ந்தது.
அங்கு போக்குவரத்து அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தச் சொன்னனர். ஆனால் ஓட்டுநர் அதனை ஏற்க மறுத்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.