சிங்கப்பூரில் இருந்து வெளிநாடு செல்கிறீர்களா இதோ இது உங்களுக்காக!!

சிங்கப்பூரில் இருந்து வெளிநாடு செல்கிறீர்களா இதோ இது உங்களுக்காக!!

சென்ற ஆண்டு சுமார் 340,000 சிங்கப்பூரார்கள் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தங்களது பயண விபரங்களை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணைய பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டை காட்டிலும் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் E-Registered சேவை மூலம் தங்கள் பயண விபரங்களையும் தொடர்பு விபரங்களையும் தெரிவித்து விட்டு செல்லலாம்.

வெளிநாடுகளில் சிங்கப்பூரார்கள் இருக்கும் பொழுது ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் சிங்கப்பூரார்களுக்கு உதவி வழங்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
சிங்கப்பூரார்கள் இந்த சேவையை பயன்படுத்த வெளியுறவு அமைச்சகம் ஊக்குவிக்கிறது.