சிங்கப்பூரில் அடுத்து வரப்போகும் “புதிய கட்டுப்பாடுகள் ” என்ன??

சிங்கப்பூரில் அடுத்து வரப்போகும் "புதிய கட்டுப்பாடுகள் " என்ன??

சிங்கப்பூரில் மே 7ஆம் தேதி (இன்று) நாடாளுமன்றத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து விரிவாக பேசப்பட இருக்கின்றன. அந்தக் கூட்டத்தில் 10 க்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் வாகனங்கள் வேக கட்டுப்பாட்டை மீறியும் ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கியதில் ஏற்பட்ட மரணங்களை குறித்தும், தற்பொழுது கொடுக்கப்படும் தண்டனைகளை மறு ஆய்வு செய்யலாம் என்று கூட்டத்தில் கேள்வி எழுப்பப்படும்.

சாலையில் நடை பாதையை கடக்கும் வாகன ஓட்டிகள் வாகனத்தின் வேகத்தை குறைக்காமல் செல்வதை தடுக்கும் தொடர்பான நடவடிக்கைகளும் இந்த கேள்வி பட்டியலில் அடங்கும்.

இவற்றில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்ய ஏதும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவரிக்கப்பட உள்ளன.

டெம்பனேசில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர், அது போன்ற விபத்துகளை தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படும்.

இதனால் சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கும் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கும் மறுபயிர்ச்சிகளை வழங்கலாமா என்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுக்கிறது.

“மெதுவாக செல்லுங்கள் என்ன அவசரம்” ,  இது போன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  வாசகங்கள் அடங்கிய பலகைகளை தனியார் குடியிருப்பாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் வாகன ஓட்டிகளின் கவனத்திற்காக  ஏற்படுத்தி வருகின்றனர்.