சொந்த வீடுகளை இழந்து தவிக்கும் பொது மக்கள்!! வரலாறு காணாத அவல நிலை!!

சொந்த வீடுகளை இழந்து தவிக்கும் பொது மக்கள்!! வரலாறு காணாத அவல நிலை!!

பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 115,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ஜனாதிபதி லூலா, அவரது அமைச்சரவை உறுப்பினர்களோடு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

இதுவரை காணாத மோசமான இயற்கை பேரிடர் என்று மாநில கவர்னர் கூறினார். இத்தகைய மோசமான பேரிடர் இதுவரை வரலாற்றில் பதிவாகவில்லை என்று கூறினார். கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துள்ளதாக கூறினார்.

மேலும் 105 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பல இறப்புகள் குறித்து விசாரணை நடத்தப்படுவதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தொடர் மழையால் மீட்பு முயற்சிகள் சிக்கலாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இது மாநிலத்தின் நகரங்களில் மூன்றில் இரண்டு பங்கை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தது.

கட்டிடங்கள் மோசமாக சேதமடைந்ததால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

போர்டோ அலெக்ரேயின் சர்வதேச விமான நிலையம் மே 3 முதல் மூடப்பட்டது.

பல நகரங்களில் வெள்ளத்தால் சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து சிறிய படகுகள், கயாக்ஸ் மற்றும் ஜெட் ஸ்கிஸ் மூலம் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.