கலிபோர்னியா கடற்கரையில் ஏற்பட்ட தீ விபத்து!!

கலிபோர்னியா கடற்கரையில் ஏற்பட்ட தீ விபத்து!!

2019 ஆம் ஆண்டு தெற்கு கலிபோர்னியா கடற்கரையில் தீப்பிடித்த டைவ் படகின் கேப்டனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

70 வயதான அவர் தனது பொறுப்புகளை புறக்கணித்த குற்றத்திற்காக 34 பேரின் துயர மரணத்திற்கு வழிவகுத்தது.

கான்செப்ஷன் என்று பெயரிடப்பட்ட படகு சாண்டா குரூஸ் தீவு அருகே நங்கூரமிட்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது.

கேப்டன் மற்றும் நான்கு பணியாளர்கள் உயிர் பிழைத்தனர். ஆனால் 33 பயணிகள் மற்றும் ஒரு பணியாளர் இறந்தனர்.

பலியானவர்களில் 26 மற்றும் 46 வயதுடைய சிங்கப்பூரர்கள் இருவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேப்டனின் வயது மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமிருந்து உணர்ச்சிவசப்பட்ட சாட்சியங்களைக் கேட்ட நீதிபதி தண்டனையை முடிவு செய்தார்.

கேப்டன் தனது செயலுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார் என்று அவர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

மேலும் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதாகவும்,இந்த துயர சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.