Latest Sports News Online

சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான தேவை குறைகிறது!

சிங்கப்பூரில் 36 விழுக்காட்டுக்கு மேல் கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அதிகரித்து இருக்கிறது.

ஆனால்,அது குறைய வாய்ப்பு இருப்பதாக தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதற்குக் காரணமாக பார்க்கப்படுவது வாடகைதாரர்கள் அதிக விலை கொடுக்க மறுப்பதே என்று சொல்லப்படுகிறது.

வீடுகளுக்கான வாடகை கணிசமாக குறைந்து வருகிறது.

கூட்டுரிமை வீடுகள், வீடமைப்பு வளர்ச்சி கழகம் (HDB) ஆகியவற்றுக்கான வாடகையைக் குறித்து மிகக் குறைவானவர்கள் மட்டுமே விசாரிக்கின்றனர்.

இதனை சொத்து முகவர்கள் CNA விடம் கூறினர்.

தற்போது புதிய கூட்டுரிமை வீடுகள் கட்டப்பட்டு வருவதால் அவர்களுக்கு அதிகமாக தேர்ந்தெடுப்பதற்கு இருப்பதாக தெரிவித்தனர்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் வழங்கப்படும் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளுக்காக (BTO) காத்திருக்கின்றனர்.

அவர்களுக்கு அந்த வீடு கிடைத்ததும் அவர்கள் வசிக்கும் வாடகை வீடுகளிலிருந்து வெளியேறுகிறார்கள்.

தற்போது வாடகை வீடுகளுக்கான தேவை குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.