Latest Sports News Online

SolarNova திட்டத்தின்கீழ் ஏலக் குத்தகைக்கு அழைப்பு விடுத்த வீடமைப்பு வளர்ச்சி கழகம்!

சிங்கப்பூரில் எட்டாவது முறையாக ஏலகுத்தகைக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் SolarNova என்ற திட்டத்தின் கீழ் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த SolarNova திட்டத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும், பொருளியல் வளர்ச்சிக் கழகமும் ஆகிய இரண்டும் இணைந்து நடத்துகிறது.

இந்தத் திட்டத்தின் நோக்கமானது, சூரியசக்தி துறையை மேம்படுத்த வேண்டும்.

சூரிய சக்தி தகடுகள் 104 அரசாங்க இடங்களிலும்,1075 கழக பிளாக்குகளிலும் பொருத்தப்படும்.

சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தும் வேலை 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறுவடையும் என எதிர்பார்க்கலாம்.

இதுவரை சிங்கப்பூரில் சூர்யசக்தி தகடுகள் 3,300 கழக பிளாக்குகளில் பொருத்தப்பட்டுள்ளது.