வெளிநாட்டு ஊழியர்கள் இதை செய்தால் பிரம்படி,சிறை தண்டனை, அபராதம் கிடைப்பது நிச்சயம்!!

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களில் சிலர் கம்பெனிக்கு தெரியாமல் முறையான முன்அறிவிப்பு அளிக்காமல் வெளியேறி சிங்கப்பூரிலேயே தங்கியிருந்து வேறு வேலை செய்கின்றனர். அதற்கு Over Stay என்று ஆங்கிலத்தில் கூறப்படும். இத்தகைய சட்டவிரோதமான செயலை செய்தால், நீங்கள் பணிபுரிந்த கம்பெனி உங்களின் வேலை அனுமதி அட்டையை (Work Permit) ரத்து செய்து விடும். அது மட்டுமல்லாமல் உங்களை காணவில்லை என்றும், கம்பெனிக்கு தெரியாமல் வெளியேறி விட்டீர்கள் என்றும் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்படும்.

தகவலை பெற்றவுடன் காவல்துறை உங்களை தேட தொடங்குவார்கள். அவர்களிடம் நீங்கள் சிக்கும் சமயத்தில் சட்டவிரோதமாக ஏதேனும் வேலை பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்தால் உங்களை கைது செய்வார்கள்.நீங்கள் சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கி உள்ளீர்கள் என்றாலும் கைது செய்யப்படுவீர்கள்.நீங்கள் சட்டவிரோதமாக எத்தனை நாட்கள் தங்கி உள்ளீர்கள் என்பதை பொறுத்து உங்களுக்கான தண்டனை மாறுபடும். அதாவது சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

உங்களின் தண்டனை முடிந்தவுடன் , தாய்நாட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.மீண்டும் உங்களால் சிங்கப்பூருக்குள் வர முடியாது. நீங்கள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்படும். உங்களின் பாஸ்போர்ட் தடை செய்யப்படும். இது போன்ற செயலை செய்வதற்கு முன் நீங்கள் எதிர் கொள்ள வேண்டிய பின்விளைவுகள் பற்றி நன்கு யோசியுங்கள்.

நீங்கள் பணிபுரியும் கம்பெனியில் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள் என்றால், மனிதவள அமைச்சகத்திடம் (MOM) தாராளமாக புகார் அளிக்கலாம். நீங்கள் அளித்த புகாருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

அதனால் தயவு செய்து கம்பெனியில் இருந்து வெளியேறாதீர்கள்.

யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்காதீர்கள்; நீங்கள் எடுத்த முடிவு தவறாக இருந்தால் அதனால் வரும் பின்விளைவுகள் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும்.

இத்தகைய செயலை செய்வதால் நீங்கள் மட்டும் பாதிக்கப்படுவதோடு, உங்களின் குடும்பமும் பாதிக்கப்படும்.