ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 27 பதக்கங்களை குவித்தது இந்தியா… பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த சாதனை!!

24 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்பொழுது தாய்லாந்தின் தலைநகர் பேங்க் அக்கில் நடைபெற்று வருகின்றது. இதனை ஒட்டி இந்திய நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒரே நாளில் ஐந்து வெள்ளி பதக்கங்களை தட்டி தூக்கியுள்ளனர். எனவே தற்பொழுது 27 பதக்கங்களுடன் இந்திய அணியானது பதக்கங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் படித்து சாதனை படைத்துள்ளது.

நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், கலப்பு தொடர் ஓட்டம் போன்ற பல போட்டிகளில் நம் இந்திய நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட போட்டியானது நேற்று நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டிகளில் 6 தங்கப்பதக்கம், 12 வெள்ளி பதக்கம், ஒன்பது வெண்கல பதக்கம் என, மொத்தம் 27 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது.

எனவே பதக்கங்களின் பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். இந்நிலையில், சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான பதக்கங்களை பெற்று இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும், பட்டியலில் இந்திய அணி மூன்றாம் இடத்தை பிடித்ததற்காக தலைவர்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். விளையாட்டு துறையில், இந்திய வீரர்களின் சாதனையானது வருடத்திற்கு வருடம், மெருகேறிக் கொண்டே போகின்றது என்று விளையாட்டு வல்லுநர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

பதக்கங்களை குவித்து கொண்டு இந்தியாவிற்கு வரும் வீரர்களை வரவேற்க ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக இந்திய நாட்டின் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.