சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க புதிய விதிமுறை!! இனி, இதை செய்தால் மட்டும் தான் லைசென்ஸ் கிடைக்குமா?

சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க புதிய விதிமுறை!! இனி, இப்படி செய்தால் மட்டும் தான் லைசென்ஸ் கிடைக்குமா?

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ்க்கான சில சேவைகளை நேரடியாக சென்று பெற முடியாது.இது குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் பொருந்தும்.

ஆன்லைனில் மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஒரு சில சேவைகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்தது.

அவ்வாறு செய்தால் மட்டுமே டிரைவிங் லைசென்ஸை பெற முடியும் என்று தெரிவித்துள்ளது.

எதற்கெல்லாம் முன்பதிவு தேவை :

🔸 நீங்கள் வைத்திருக்கும் டிரைவிங் லைசென்ஸை ( வெளிநாட்டு லைசென்ஸ்) சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸாக மாற்றுவதற்கு,

🔸 டிரைவிங் லைசென்சில் உள்ள டிரைவரின் விவரங்களை மாற்றுவதற்கு,

இத்தகைய சேவைகளைப் பெறுவதற்கு E-Services இணையதளத்தை சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்தகைய சேவைகளை இனி, E-Services இணையத்தளத்தில் பெறலாம்.இந்த E-Services சிங்கப்பூர் காவல்துறை இணையதளத்தில் வழங்கப்படும்.

இந்த இணையதளத்தில் வாயிலாக முன்பதிவு செய்யும் மக்கள் அவர்களின் முன்பதிவினை மாற்றலாம்,சமர்ப்பிக்கலாம் அல்லது அதை ரத்து செய்யவும் அம்சங்கள் உள்ளது.

இந்த தளத்தின் மூலம் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்கு E-mail வாயிலாக 6 வாரங்களுக்குள் பதிலளிக்கப்படும்.


ஏப்ரல் 29 முதல் மே 12-ஆம் தேதி வரை போக்குவரத்து காவல்துறை தலைமையகத்திற்கு நேரடியாக சென்று சேவைகளைப் பெறலாம்.