2026 FIFA உலக கோப்பை போட்டியில் தகுதி சுற்று ஆட்டத்தில் முன்னிலை பெற்ற சிங்கப்பூர் அணி……

முதல் பகுதில் கிடைத்த வாய்ப்புகளை சிங்கப்பூர் அணியானது தவறவிட்ட நிலையில் Christopher Van Huizen மற்றும் Jacob Mahler ஆட்டம் அணியை வெற்றி பாதைக்கு முன்னேற உறுதுணையாக இருந்தது. இறுதி நேரத்தில் கிறிஸ்டோபர் வானின் அசத்தலான கோலின் சிங்கப்பூர் அணி முன்னிலை வகித்தது .

அதனை தொடர்ந்து , இரண்டாவது பாதியில் குவாம் அணிக்கு பிரீ கிக் கிடைத்த போது பார்வையாளர்களை திகில் நிமிடத்திற்கு அழைத்து சென்றது, இருப்பினும் ஹாசன் சன்னி (கோல்கீப்பர்) வெற்றி வாய்ப்பை குவாம் அணிக்கு தரவில்லை.

2015 உலக கோப்பை சுற்றில் சிங்கப்பூர் அணிக்கும் குவாம் அணிக்கும் இடையே நடைபெற்ற இறுதி போட்டியில் (2-2) என்ற நிலையில் டை பிரேக் ஆனது. அங்கு தவறவிட்ட வாய்ப்பை தற்போது லாவகமாக பிடித்தது சிங்கப்பூரின் லயன்ஸ் அணி.

ஆட்டத்தை தவறவிட்ட குவாம் அணி டகாயுக்கி நிஷிகைய அணியுடன் போட்டியிட உள்ளது.வரும் அக்டோபட் 17 அன்று இரண்டாவது லெக் டை சுற்றுக்கு செல்வார்கள். மேலும் அதில் வெற்றி பெரும் அணியானதுசீனா, சவுத் கொரியா மற்றும் தாய்லாந்து அணிகளுடன் மோத உள்ளது. மேலும் சிங்கப்பூர் லயன்ஸ் அணியின் கிறிஸ்டோபர் வான் – னின் அசத்தலான கோல் பார்வையாளர்களுக்கு திருப்தி அளித்ததாகவும் இதுவே வானின் முதல் சர்வதேச கோலாகவும் இடம்பெற்றது.