தனது 21 வயதில் அறுவை சிகிச்சை…… மனம் தளராமல் சிங்கப்பூருக்கு பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை……

சீன தற்காப்பு கலையான Wushuவின் சிங்கப்பூர் பிரதிநிதி Kimberly Ong-க்கு இது ஒரு சவாலான ஆண்டாகும்.

ஜனவரி மாதம் அவர் தனது 21 வது வயதில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

சில மாதங்களிலேயே அவர் 32 ஆவது SEA விளையாட்டுகளில் மீண்டும் பங்கேற்று, பெண்களுக்கான Daoshu மற்றும் Gunshu ஒருங்கிணைந்த போட்டியில் தங்கம் வென்று, பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

செப்டம்பர் 25 அன்று Hangzhou-வில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் வெண்கல பதக்கத்தை வென்றார்.

2014-க்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் Wushu-வில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

கோவிட்-19 காரணமாக ஒரு வருடம் தாமதமான பிறகு, இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீன அதிபர் Xi Jinping-ஆல் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், சிங்கப்பூர் அணி 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 14 வெண்கல பதக்கங்களை வென்றது.