69 – ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!!

டெல்லி ராஷ்டிரபதி பவனில் 69-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது..இதில் தேர்வு செய்யப்பட்ட திரைப்பட நடிகர்கள் , நடிகைகள, இயக்குனர்கள் மற்றும் பாடகர்கள் போன்றோர் தங்கள் விருதுகளை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் பெற்றுக் கொண்டனர்.

அதில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை , இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ” கடைசி விவசாயி” திரைப்படம் தட்டிச்சென்றது.

மேலும் சிறந்த நடிகருக்கான விருதை ” புஷ்பா ” திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் பெற்றார். இதுவே அவரின் முதல் தேசிய விருதாகவும் கருதப்படுகிறது.

அதுமட்டும் இன்றி புஷ்பா திரைப்பட இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சிறந்த இசை அமைப்பாளர்கான விருதை பெற்றார்.

மேலும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா “கருவறை” என்ற குறும் படத்திற்கும், நடிகர் மாதவன் ” ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட்” படத்திற்காக விருதினை பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்தி நடிகை ஆலியா பாட் மற்றும் கிருட்டி சனோன் ஆகியோர் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றனர். அனைவருக்கும் விருப்பமான பாடகி ஸ்ரேயா கோசல் ” இரவின் நிழல் ” பாடலுக்காக விருதினை கரங்களில் ஏந்தினார்.