Singapore News in Tamil

சிங்கப்பூரில் புதிதாக வர உள்ள வட்டாரம்!

சிங்கப்பூரின் ஜூரோங் ஈஸ்ட் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள நிலம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

அங்கே புதிய ஜூரோங் லேக் வட்டாரம் அமைய உள்ளது.

அங்கு 1,700 வீடுகளும், கடைகளும்,அலுவலகங்களும் கட்டப்பட உள்ளன.

அதைப் பற்றிய தகவலை நேற்று (ஜூன் 22) நகரச் சீரமைப்பு ஆணையம் தெரிவித்தது.

புதிய வட்டாரங்கள் அடுத்த 10 முதல் 15 ஆண்டில் தயாராகும்.

புதிய ஜூரோங் லேக் வட்டாரத்தில் வீடுகள்,கடைகள்,உணவகங்கள்,ஹோட்டல்,பொழுதுபோக்கு தலம் என பல அம்சங்களைக் கொண்டதாக இருக்கும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜூரோங் வட்டாரத்தில் ரயில் நிலையத்திற்கு அடுத்ததாக ஒரு புதிய Jurong Region Line ரயில் நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் கட்டப்படும் என்றும் நகரச் சீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் குத்தகைக்கான விண்ணப்பங்கள் நிறைவடையும்.

ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே அதனை வடிவமைக்கும்.

ஜூரோங் லேக் பகுதி மத்திய பகுதிக்கு வெளியே சிங்கப்பூரின் மிகப்பெரிய வர்த்தக வட்டாரமாக விளங்கும்.