Latest Singapore News

சேவைகள், உணவுப் பொருட்களின் விலைவாசி குறைவின் எதிரொலி!சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கத்தில் பாதிப்பு!

கடந்த மாதம் சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் 4.7 சதவீதம் குறைந்துள்ளது.

அடிப்படை பணவீக்கம் குறைய முக்கிய காரணம் சேவைகள், உணவுப் பொருட்களின் விலைவாசி தொடர்ந்து குறைந்த வருவது என்று சிங்கப்பூர் நாணய வாரியமும், வர்த்தக, தொழில் அமைச்சகமும் தெரிவித்தன.

அதில் தனியார் தங்குமிட செலவுகள், போக்குவரத்து ஆகியவை சேர்க்கப்படவில்லை.

மொத்த பணவீக்க விகிதம் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.6 சதவீதம் குறைந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் தனியார் போக்குவரத்து செலவு குறைந்ததே.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் அடிப்படை பணவீக்கம் மிதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.