சிங்கப்பூருக்குள் 1.6 டன் கணக்கில் காய்கறிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயன்ற லாரிகள் பறிமுதல்!!

சிங்கப்பூருக்குள் 1.6 டன் கணக்கில் காய்கறிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயன்ற லாரிகள் பறிமுதல்!!

சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA), குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்துடன் இணைந்து சோதனை நடவடிக்கையை மே 2,3- ஆம் தேதிகளில் மேற்கொண்டது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரிகளை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சந்தேகத்தின் அடைப்படையில் இரண்டு லாரிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது 1.6 டன் எடையுள்ள சட்டவிரோத காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.அவை மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டவை என்று தெரிவித்தனர்.

ஆய்வு செய்ததில் கீரை, பாகற்காய், தக்காளி, டர்னிப் மற்றும் உறித்த வெங்காயத்தை உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முறையான அனுமதி மற்றும் அறிவிப்பு இல்லாமல் காய்கறிகளை இறக்குமதி செய்வது சிங்கப்பூர் சட்டத்திற்கு எதிரானது.

பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ள அல்லது பயன்படுத்தப்பட்டுள்ள காய்கறிகளை உண்பதால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது தெரிவித்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.