சிங்கப்பூரில் அதிகமாக ஏற்படும் சாலை விபத்துகள்!!காரணம் என்ன?

சிங்கப்பூரில் அதிகமாக ஏற்படும் சாலை விபத்துகள்!!காரணம் என்ன?

சிங்கப்பூரில் தெம்பனிஸ் அவென்யூ 4க்கும் அவென்யூ 1க்கும் இடையில் உள்ள சாலையில் ஏப்ரல் 22ஆம் தேதி ஏற்பட்ட மோசமான விபத்தில் ஆறு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. அதில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்த இடத்தில் இதுவரை எத்தனை விபத்துகள் நேர்ந்துள்ளது.மேலும் விபத்தில் சிக்கி எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று(மே 7) நடந்த நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு போக்குவரத்து மூத்த துணையமைச்சர் பதிலளித்தார்.

நிலப்போக்குவரத்து ஆணையத்திற்கு முன்னதாக ஏற்பட்ட விபத்து நடந்த சந்திப்பின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எந்தவொரு புகார்களும் வரவில்லை என்றும்,அதோடு அதன் வடிவமைப்பானது அனைத்துலக பாதுகாப்பு தரநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது என்றும் கூறினார்.

கடந்த 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தெம்பனிஸ் சந்திப்பில் ஏற்பட்ட விபத்துகளில் பலியனோர் இல்லை என்றும், கோர விபத்து ஏற்பட்டதாக பதிவுகள் இல்லை என்றும் கூறினார்.

2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கும் இடையில் சிங்கப்பூரில் ஏற்பட்ட பெரும்பாலான விபத்துகளுக்கு டிரைவர்களின் கவனக்குறைவு முக்கிய காரணம்.வேகத்தை கட்டுப்படுத்த தவறியது மேலும் ஒரு காரணம் என்று உள்துறை துணையமைச்சர் கூறினார்.

வாகனத்தை குருட்டு தனமாக ஓட்டுவதால் ஆண்டுக்கு மூன்று அபாயகரமான விபத்துகள் ஏற்படுகின்றன என்று கூறப்பட்டது.

வாகனத்தை வேகமாக ஓட்டுவதால் ஒரு வருடத்திற்கு சுமார் 29 உயிரிழப்புகள் ஏற்படும் விபத்துகள் நேர்வதாகவும் தெரிவித்தார்.

சுமார் 117 பேர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதன் எண்ணிக்கை கடந்த 2023-ஆம் ஆண்டு 131 ஆக கூடியது.
சாலை விதிமீறல்கள் தொடர்பான கடுமையான தண்டனைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் விதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் சாலை விதிமீறல்களுக்கான தண்டனை குறித்து அவ்வப்போது மறுஆய்வு நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.