செந்தோசா கடலில் மிதந்த பெண்ணின் சடலம்!!! நடந்தது என்ன?சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்??

செந்தோசா கடலில் செவ்வாய்கிழமை (நேற்று) மாலை ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணையில் , கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று செந்தோசா கடலில் நடந்த கயாக் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போனவர் என்பது தெரியவந்தது.

ஞாயிற்றுகிழமை (அக்டோபர் 22) அன்று மூன்று கயாக்கர்கள் செந்தோசாவிலிருந்து தெற்கு நோக்கி புறப்பட்டனர்.ஒரு ஆண் கயாக்கர் படகு கடலில் கவிழ்ந்தது.

அப்போது கடலில் விழுந்த ஆண் கயாக்கரை காப்பாற்ற முயன்ற போது அந்த பெண்மணி கடல் அலையில் சிக்கி கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையும்(SCDF), கடல்துறை மற்றும் துறைமுக ஆணையமும் காணாமல் போன 33 வயதுடைய பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் , இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.