மற்றொரு கார் மீது மோதுவதை தவிர்க்க காப்பி கடையின் தூண் மீது மோதி விபத்து!!

மற்றொரு கார் மீது மோதுவதை தவிர்க்க காப்பி கடையின் தூண் மீது மோதி விபத்து!!

சிங்கப்பூரில் கேலாங் லோரோங் 3 இல் உள்ள ஒரு காப்பி கடையின் பில்லர் மீது கார் மோதியது.

இச்சம்பவம் ஏப்ரல் 26-ஆம் தேதி நடந்தது.

இந்த சம்பவம் குறித்த வீடியோவை SG Road Vigilante தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு இரவு 10.25 மணியளவில் தகவல் வந்ததாக கூறியது.

காரை ஓட்டிய 32 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காரில் பயணித்த மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.