தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர்கள் திறந்து விட்டார்களா?

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர்கள் திறந்து விட்டார்களா?

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர்கள் திறந்து விட்டார்களா? அதைப்பற்றி தெளிவாக பார்ப்போமா!! சிங்கப்பூருக்கு செல்ல விரும்புவோர் டெஸ்ட் அடித்து செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்!!

டெஸ்ட் சென்டர்கள் திறக்கப்போவதாக கூறி ஏஜென்ட்கள் முன்பணம் பெற்று வருகின்றனர்.ஆனால் டெஸ்ட் சென்டர் மே மாதம் திறக்க உள்ளதா? அல்லது Quota அதிகரிக்க உள்ளதா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

மே மாதம் டெஸ்ட் சென்டர் திறக்க போவது,Quota அதிகரிப்பது குறித்த செய்தி ஓர் வதந்தியாக இருக்கக்கூட வாய்ப்புள்ளது.

நீங்கள் இதை உறுதி செய்வதற்கு தமிழ்நாட்டில் உள்ள டெஸ்ட் சென்டர்களுக்கு நேரடியாக சென்று அல்லது தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

சென்னையில் செயல்படும் டெஸ்ட் சென்டர்கள் :

இதில் மிகவும் முக்கியமான டெஸ்ட் சென்டர்கள்.

🔸 SV Training Centre

🔸 RK Singapore (BCA) Skilled Training & Testing Centre

🔸 Hytech Goodwill Training & Testing Centre

🔸 ASTRO Training Service

டெஸ்ட் சென்டர்களின் முகவரிகள் :

🔸 SV Training Centre :

No.28,Selliamman koil street, Medavakkam-mambakkam road, Ponmar, Chennai-600127

🔸 RK Singapore (BCA) Skilled Training & Testing Centre :

No.2/171, East coast road, pandian salai, Neelankarai, opposite CSB Bank, Chennai -600115.

🔸 Hytech Goodwill Training & Testing Centre :

No.2/392A,Mambakkam road,Medavakkam,Chennai -600100.

🔸 ASTRO Training Service :

Plot No.5/6 Selvam nagar ponniyamman medu, 200 feet inner ring road, near Ratteri junction, Chennai -600110.

தற்போது வெளிவந்துள்ள செய்தி உண்மையா? என்பதை டெஸ்ட் சென்டர்களுக்கு நேரடியாக சென்று விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவசரப்பட்டு முன்பணம் கட்டிவிடாமல் Google இல் டெஸ்ட் சென்டர்களின் தொடர்பு எண்களைத் தேடி தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

அவ்வாறு செய்தால் நீங்கள் கட்ட வேண்டிய முன்பணம் குறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஒரு சிலர் ஏஜென்ட் ஆக நடுவில் இருப்பவர்கள் அதிக பணத்தையும் பெற்று கொள்ளவும் வாய்ப்புள்ளது. எனவே,டெஸ்ட் சென்டர்களுக்கு நேரடியாக சென்று அல்லது தொடர்பு கொண்டு தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

நேரடியாக செல்வதால், ஒரு சில டெஸ்ட் சென்டர்கள் உங்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்வார்கள்.

டெஸ்ட் சென்டர்கள் திறக்கப்படும் பொழுது உங்களை தொடர்பு கொள்வார்கள்.

நீங்கள் நேரடியாக விசாரிக்கும் போது டெஸ்ட் அடிப்பதற்கு எவ்வளவு செலவாகும்? எத்தனை நாட்கள் ஆகும்? ஆன்லைனில் புக் செய்வது எப்படி? போன்ற முக்கியமான தகவல்களையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

டெஸ்ட் சென்டர்கள் அதிகத்தொகையை முன்பணமாக பெற்று கொள்ள மாட்டார்கள்.

குறைவான முன்பணமாக கேட்டால் பணத்தை செலுத்தி விட்டு காத்திருக்கும் நேரம் எத்தனை நாட்கள்? என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு ஏஜென்ட்கள் மூலம் செல்லாமல் நீங்களாக நேரடியாக சென்று கேட்டு தெரிந்து கொண்டால் உங்களுக்கு ஆகும் செலவில் குறைய வாய்ப்புள்ளது.