சிங்கப்பூரில் ஓர் மகிழ்ச்சி செய்தி!!

சிங்கப்பூரில் உள்ள FairPrice குழுமம் ஓர் தகவலை வெளியிட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு 1 சதவீத கட்டண தள்ளுபடியை வழங்கவுள்ளதாக தெரிவித்தது.

இந்த கட்டண தள்ளுபடி மொத்தம் 500 பொருட்களுக்கு பொருந்தும்.

அதன் சூப்பர்மார்க்கெட் கடைகள் மற்றும் ஆன்லைனிலும் இந்த கட்டண தள்ளுபடி பொருந்தும் என்று கூறியது.

மெர்டேக்கா தலைமுறை,முன்னோடி தலைமுறை மற்றும் CHAS நீல அட்டை வைத்திருக்கும் உள்ளிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தியும் அறிவித்துள்ளது. அவர்கள் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி திட்டங்களை பயன்படுத்தலாம்.

குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் 3% கட்டண தள்ளுபடி கொடுக்கப்படும் என்றும் கூறியது.

ஜிஎஸ்டி உயர்வை ஈடு செய்ய இந்த கட்டணம் தள்ளுபடி உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியது.