7 ஆண்டுகளாக ஆண்!! குழப்பமடைந்த பராமரிப்பாளர்கள்!! DNA வில் வெளிவந்த உண்மை!!

7 ஆண்டுகளாக ஆண்!! குழப்பமடைந்த பராமரிப்பாளர்கள்!! DNA வில் வெளிவந்த உண்மை!!

ஜப்பான் உயிரியல் பூங்காவில் ஜென்-சான் என்ற 12 வயது நீர்யானை ஏழு ஆண்டுகளாக ஆணாகவே கருதப்பட்டது.

நீர்யானை உண்மையில் பெண் என்பதை அறிந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஜென்-சான் மெக்சிகோவில் உள்ள ஆப்பிரிக்கா சஃபாரி விலங்கு பூங்காவில் இருந்து 2017 இல் ஒசாகா டென்னோஜி உயிரியல் பூங்காவிற்கு வந்தது.
அங்கு அதை ஒரு ஆண் என்று கருதி சான்றிதழில் ஆண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அது ஒரு வழக்கமான ஆண் நீர்யானை போல் நடந்து கொள்ளாததால் மிருகக்காட்சிசாலை பராமரிப்பாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

ஜென்-சான் மற்ற ஆண் நீர்யானைகளைப் போல் நடந்து கொள்ளாமல் இருப்பதால் அவர்கள் குழப்பமடைந்தனர்.

பெரும்பாலும் ஆண் காண்டாமிருகங்கள் தன் பிரதேசத்தைக் குறிக்கும் ,அதன் மலத்தை பரப்பும்.ஆனால் ஜென்-சான் அவ்வாறு செய்யவில்லை.

அதேபோல் பெண் நீர்யானைகளை இனப்பெருக்கத்திற்காக அழைப்பும் விடுக்கவில்லை.

மிருகக்காட்சிசாலை பராமரிப்பாளர்களால் ஆண் உறுப்புகளை பார்க்க முடியவில்லை.நீர்யானைகள் அருகில் செல்வது ஆபத்தானது.

எனவே டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. ஜென்-சான் பெண் என்பது உறுதி செய்யப்பட்டது.

மிருகக்காட்சிசாலை ஜென்-சானுக்கு சிறந்த கவனிப்பை அளிப்பதாகவும், அவள் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.