இயற்கையை ரசிக்க ஒரு நாள் சுற்றுலா பயணமாக சென்ற தென் கொரியர்களுக்கு நேர்ந்த துயரம்!!

வியட்நாமில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் தடம்புரண்டு ஓடியது.

அக்டோபர் 24ஆம் தேதி அன்று தென் கொரியாவை சேர்ந்த 4 சுற்றுலா பயணிகள் தலாத்தின் இயற்கை அழகை ரசிப்பதற்காக, ஒரு நாள் சுற்றுலா பயணமாக அங்கு சென்றனர்.

அப்பகுதியில் மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நீரோடையில் வெள்ளம் தடம்புரண்டு ஓடியதால் நீர்மட்டம் உயர்ந்தது.

சுற்றுலாப் பயணிகளின் ஜீப் நீரோடையைக் கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

நான்கு சுற்றுலாப் பயணிகளின் உடல்கள், விபத்து நடந்த இடத்தில் இருந்து பல கிலோமீட்டருக்கு அப்பால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காரின் ஓட்டுநர் வியட்நாமை சேர்ந்தவர். அவர் உயிருடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வியட்நாமில் சுமார் 100 பேர் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஏற்பட்ட வெள்ளம்,நிலச்சரிவு போன்ற இயற்கை பாதிப்புகளால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தது.

இந்த பேரழிவுகளுக்கு காரணம் காலநிலை மாற்றமே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.