சிங்கப்பூரில் வேலையிடத்தில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த துயரம்!! சுமார் 6 நாட்களுக்கு பிறகு உயிர் பிரிந்த சோகம்!!

சிங்கப்பூரில் வேலையிடத்தில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த துயரம்!! சுமார் 6 நாட்களுக்கு பிறகு உயிர் பிரிந்த சோகம்!!

சிங்கப்பூரில் சுங்கே கடுகட்டில் உள்ள salvage yard இல் பணிபுரிந்து வந்த வெளிநாட்டு ஊழியருக்கு Forklift கழுத்தில் தாக்கியது. அவர் பங்களாதேஷைச் சேர்ந்த 37 வயதுடைய பிஸ்வாஸ் சஞ்சய் குமார்.

இச்சம்பவம் ஏப்ரல் 16-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், துரதிஷ்டவசமாக ஏப்ரல் 22-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

சுமார் 6 நாட்களுக்கு பிறகு அவரின் உயிர் பிரிந்தது.

சம்பவம் நடந்த தினத்தன்று, Forklift டிரைவருக்கு பிஸ்வாஸ் அறிவுரைகளை கூறி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் அமைதியாக இருப்பதை உணர்ந்த Forklift Driver சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.

பிஸ்வாஸ் தரையில் கழுத்தில் காயத்துடன் கிடந்ததாக கூறினார். உடனடியாக தனது காரின் மூலம் அவரை இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறினார்.

விபத்து நடந்ததைத் தொடர்ந்து பெங் செங் மெட்டல் நிறுவனம் அந்த வேலையிடத்தில் அதன் அனைத்து வேலைகளையும் நிறுத்துமாறு MOM தெரிவித்திருந்தது.

அவர் சிங்கப்பூருக்கு 10 ஆண்டுகள் முன்பு வந்தார். தற்போது அவர் பணி புரிந்த கம்பெனியில் சேர்ந்து ஒரு மாதங்களே ஆவதாக கூறப்படுகிறது.

பிஸ்வாஸ் சம்பவம் நடந்த தினத்தன்று ஒரு பையை தூக்கி செல்ல நினைத்துள்ளார். அப்போது ஃபோர்க் ஒன்று அவரின் கழுத்தில் வெட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவரின் உடல் ஏப்ரல் 26-ஆம் தேதி சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது.

உயிரிழந்த வெளிநாட்டு ஊழியரின் குடும்பத்தினருக்கு நிறுவனம் உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.