Singapore News in Tamil

சிங்கப்பூரில் கோவிட்-19 தடுப்பூசி எங்கு போடப்படும்? எப்போது போடப்படும்?

அடுத்த மாதம் (ஜூலை 2023) முதல் தேதியிலிருந்து 8 பலதுறை மருந்தகங்களில் கோவிட்-19 தடுப்பூசிகள் போட்டுகொள்ளலாம்.

Bukit Batok,Eunos,Geylang,Kallang,Pioneer,Punggol,Tampines,Woodlands உள்ளிட்ட பலதுறை மருந்தகங்களில் தடுப்பூசி சேவைகள் வழங்கப்படும்.

அந்த தகவலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.

தற்போது கோவிட்-19 ஒரு நிரந்தர நோயாக மாறிஉள்ள சூழ்லில் தடுப்பூசிகளுக்கான தேவை தொடர்ந்து இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Pfizer-BioNTech/Comirnaty தடுப்பூசிகள் அந்த 8 பலதுறை மருந்தகங்களில் 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட தகுதி உள்ள நோயாளிகளுக்கு போடப்படும்.

5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சில மருந்தகங்களில் அந்த தடுப்பூசியைப் போடலாம்.

Moderna/Spikevax தடுப்பூசி 6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.

சிங்கப்பூர் முழுவதும் உள்ள 23 பலதுறை மருந்தகங்களில் தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து குறிப்பிட்ட 8 பலதுறை மருந்தகங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

அனைவரும் சரியான நேரத்தில் தடுப்பூசி போடுமாறு அமைச்சகம் அறிவுறுத்துகிறது.