Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் தொடர்ந்து சரிவைக் கண்ட ஏற்றுமதி!

சிங்கப்பூரில் 8 வது மாதமாக எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவைக் கண்டுள்ளது.

கடந்த மாதம் 14.7 சதவீதம் சரிந்தது.

இது ராய்ட்டர்ஸ் கணித்த 8.1 சதவீதம் சுருக்கத்தைவிட அதிகமாகும்.

அது ஏப்ரல் மாதத்தில் 9.8 சதவீதமாக குறைந்துள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி குறைந்திருந்தது.

கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் மொத்த வர்த்தகம் 17.9 சதவீதமாக சரிந்தது.

அதற்கு முந்தைய மாதம் 18.9 சதவீதமாக இருந்தது.