பாஜா கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்ட 3சடலங்கள்!! யார் இவர்கள்!!

பாஜா கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்ட 3 சடலங்கள்!! யார் இவர்கள்!!

மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியாவில் இரண்டு ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளும்,ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணியும் காணாமல் போன நிலையில் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சடலங்கள் காணாமல் போனவர்களா? இல்லையா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கால்ம் மற்றும் ஜேக் ராபின்சன், அமெரிக்காவைச் சேர்ந்த கார்ட்டர் ரோட் ஆகியோர் கடைசியாக ஏப்ரல் 27-ஆம் தேதி அன்று என்செனாடா அருகே சர்ஃபிங் செய்து கொண்டிருந்த போது காணப்பட்டதாக கூறப்படுகிறது.

சடலங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தடயவியல் சோதனைகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் அவர்கள் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சந்தேகத்தின் பேரில் 3 பேர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போன இடத்தில் கூடாரங்கள் மற்றும் எரிந்த டிரக் கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Follow us on : click here 👇👇

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg