மலேசியாவை சேர்ந்தவருக்கு அமெரிக்காவின் உயரிய விருது!

மலேசியாவை சேர்ந்தவருக்கு அமெரிக்காவின் உயரிய விருது!!

அமெரிக்க அதிபரின் ‘Medal of Freedom’ எனும் உயரிய விருது மலேசியாவை சேர்ந்த ஆஸ்கார்நாயகி மிஷெல் இயோ(Michelle Yeoh)-வுக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்க கலாச்சாரத்தை வளப்படுத்தவும், மேம்படுத்தவும் இயோ உதவியதாக வெள்ளை மாளிகை கூறியது.

மேலும் 18 பேர் இவருடன் இந்த விருதை பெற்றனர்.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல் ஆசிய நாட்டவர் என்ற அடிப்படையில் கலாச்சாரம் என்பது மாற்றங்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக மட்டும் அல்ல; மனங்களை திறக்கவும், ஊக்குவிக்கவும் அது பயன்படுகிறது என்பதை இயோ காட்டியிருப்பதாக திரு பைடன் பாராட்டினார்.

இயோ கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் Academy Awards நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருது வென்றார்.
இந்த விருதை வென்ற முதல் ஆசிய நாட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

60 வயதான இயோ “Everything Everywhere All At once” எனும் படத்தில் இவ்லின் வாங்(Evelyn Wang) கதாபாத்திரத்துக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.

Follow us on : click here 👇👇

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg